கொழும்பு போர்ட் சிட்டிக்கு 600 மில்லியன் டொலர் புதிய முதலீடு: 2026 இன் முதற்பாதியில் 71 முக்கிய வணிகங்களுக்கு அனுமதி

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்தங்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (1H2026) கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகளவிலான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

போர்ட் சிட்டி சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) 71 ‘உலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு’ (Businesses of Strategic Importance – BSIs) அனுமதி வழங்கப்பட்டதன் மூலமே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சி மீதான முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நடைமுறைக்கு வந்த ‘2026 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்’ (Colombo Port City Economic Commission Amendment Act) மூலமாக ஒழுங்குமுறை நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டதே இந்த முதலீட்டு எழுச்சிக்கு முக்கிய காரணமாகும்.

முக்கிய திட்டங்கள் மற்றும் காணி குத்தகை:

அனுமதி வழங்கப்பட்டுள்ள 71 வணிகங்களில் மூன்று பிரதான பெருந்திட்டங்கள் (Flagship developments) உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை:

  1. Marina Hotel Holdings Ltd: ஆடம்பர மரினா-பிரண்ட் ஹோட்டல் (Luxury marina-front hotel) கட்டுமானம்.

  2. Prime Melwa Port City Ltd: குடியிருப்பு வளாகத் திட்டங்கள்.

  3. Home Lands Port City Ltd: போர்ட் சிட்டி சென்ட்ரல் பார்க் (Central Park) பகுதிக்கு அருகில் அமையவுள்ள பன்முகப் பயன்பாட்டுத் திட்டம் (Mixed-use project).

இந்த மூன்று முன்னணி நிறுவனங்களும் கொழும்பு போர்ட் சிட்டிக்குள் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகச் சுமார் 40.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான காணி குத்தகை உடன்படிக்கைகளில் (Lease agreements) கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டங்களின் கட்டுமானக் காலத்தில் (அடுத்த 5 ஆண்டுகளில்) நாட்டிற்குள் கூடுதல் அந்நியச் செலாவணி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள்:

  • 10,000 நேரடி வேலைவாய்ப்புகள்: இந்த சேவை சார்ந்த மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட வணிகங்கள் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளும், கணிசமான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகவுள்ளன.

  • பல்வேறு துறைகள்: கடல்சார் மற்றும் தளவாடச் சேவைகள் (Maritime and logistics), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (IT and digital services), பிராந்திய தலைமையகச் செயற்பாடுகள் (Regional headquarters), சுற்றுலா மற்றும் முகாமைத்துவம், ரியல் எஸ்டேட் மற்றும் நகர அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த நிறுவனங்கள் செயல்படவுள்ளன.

முதலீட்டை எளிதாக்கும் துரித நடைமுறைகள்:

முதலீட்டாளர்களின் வசதிக்காகப் போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு பல நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:

  • ஒற்றைச் சாளர முதலீட்டு வசதி (Single Window Investment Facilitation): முதலீட்டாளர்கள் பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் செல்லத் தேவையின்றி, ஒரே இடத்தில் (Single point of contact) அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

  • 7 நாட்களில் பதிவு: தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களை ‘அங்கீகரிக்கப்பட்ட நபர்’ (Authorized Person) ஆகப் பதிவு செய்யும் நடைமுறை 7 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

  • டிஜிட்டல் உடன்படிக்கை மற்றும் விசா சலுகை: உடன்படிக்கைகள் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்படுவதுடன், வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா அனுமதிகள் 5 வேலை நாட்களுக்குள் (Working days) வழங்கப்படும்.

பிரதான நில மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டாளரான CHEC Port City Colombo Ltd நிறுவனம் ஏற்கனவே சுமார் 1.4 பில்லியன் டாலர்களை நில மீட்புக்காக முதலீடு செய்துள்ளதால், முதலீட்டாளர்கள் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய தயார் நிலையிலுள்ள நிலப்பரப்புகள் (Serviced land) வழங்கப்படவுள்ளன.

ஒட்டுமொத்த முதன்மைத் திட்டத்தின்படி (Master Plan) அனைத்துக் காணிப் பொதிகளும் குத்தகைக்கு விடப்பட்டு, முழுமையான அபிவிருத்திகள் நிறைவடையும் போது, கொழும்பு போர்ட் சிட்டி ஒட்டுமொத்தமாக 15 பில்லியன்டொலர் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) திட்டங்களில் ஒன்றாக அமையும் என நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்