உலக நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு “தொழில் முனைவோர் உதயம்” எனும் தொனிப்பொருளில் மக்கள் வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நுண் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வானது 26-06-2026 அன்று
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டு தங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் -கரைதுறைப்பற்று, உதவி பணிப்பாளர் கைத் தொழில் மற்றும் அபிவிருத்தி துறை, முல்லைத்தீவு, தவிசாளர் கரைதுறைப்பற்று பிரதேச சபை, உதவி விவசாய பணிப்பாளர் முல்லைத்தீவுசுகாதார வைத்திய அதிகாரி புதுக்குடியிருப்பு, செயலாளர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை, உதவி பிராந்திய முகாமையாளர் – மக்கள் வங்கி – வன்னி பிராந்தியம், முகாமையாளர் – மக்கள் வங்கி, முல்லைத்தீவு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது
