பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில்விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் 26.06.2026 இன்று மாசார் கிராம அலுவலர் பிரிவில் பாத்திரம் கழுவும் திரவம் (Dishwashing liquid) தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார் .
இந்நிகழ்வுக்கு வளவாளராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் மாசார் கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல்உத்தியோகத்தர,சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சுற்றுலாத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் , ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர், வடமாகாண கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் 22 வரையான சிறுதொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்

