கறுப்புப் பண மோசடி: அமைச்சரின் மகன் மற்றும் கூட்டாளிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு

தி மோர்னிங் டெலிகிராப் (The Morning Telegraph)

ரோய் டெனிஷ் (Roy Denish)

‘ஹரக் கட்டா’ வழக்கில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணையாளர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில், கப்பம் மற்றும் லஞ்ச ஊழல் திட்டம் மூலம் பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய் பணம் ஆடம்பர வாகனங்கள், சொகுசு வீடு மற்றும் பகட்டான வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றக் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனின் பாதுகாப்பு மற்றும் விடுதலையை உறுதி செய்வதற்காக, உயர் மட்ட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகக் கூறி, முன்னாள் நீதியமைச்சரின் மகன் சம்பந்தப்பட்ட பல மில்லியன் ரூபாய் கப்பம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி ஒன்றை ஊழல் தடுப்பு விசாரணையாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

dfrgtyruhgnfbdgfty6u

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, மற்றும் ஏனைய சந்தேகநபர்களான சரித் அபேசிங்க, அருண ஸ்ரீ சதுரங்க வருஷஹென்னதி ஆகியோர், ‘ஹரக் கட்டா’ என்று பரவலாக அறியப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான நதுன் சிந்தகவின் மனைவி மகேஷிகா மதுவந்தியிடமிருந்து 120 மில்லியன் (12 கோடி) ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளது. இந்த சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் ரேஞ்ச் ரோவர் ஃப்ரீலாண்டர் (Range Rover Freelander SUV) ஆடம்பர வாகனம், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ (BMW 7 Series) கார் போன்றவற்றை வாங்கியுள்ளதுடன், கஹதுடுவ பகுதியில் சொகுசு வீடு ஒன்றையும் கட்டியுள்ளதாக விசாரணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற சமர்ப்பிப்புகளின்படி, பொலிஸ் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷிற்கு நேர்ந்த அதே கதி உங்களது கணவனுக்கும் நேரிடலாம் என மதுவந்தியை அச்சமூட்டி சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளனர். தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம், சிரேஷ்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறி இப்பணத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த வழக்கின் பிரதான சாட்சியத்தின்படி, சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் 300 மில்லியன் ரூபாயைக் கோரியதுடன், பின்னர் அதனை 120 மில்லியன் ரூபாய் முன்பணமாகக் குறைத்துள்ளனர். இந்தப்பணம் நாட்டின் உயர் அதிகாரத்துவ வர்க்கத்திற்கு விநியோகிப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில் ‘ஹரக் கட்டா’வின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) 50 மில்லியன் ரூபாயும், தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்ய ஒரு முக்கிய அரசியல்வாதி மூலம் ஜனாதிபதி செயலாளருக்கு 50 மில்லியன் ரூபாயும், பூஸ்ஸ (Boossa) உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து அவரை மாற்றுவதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்க மேலும் 50 மில்லியன் ரூபாயும் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தனது தந்தை அமைச்சுத் தரப்பு விவகாரங்களைக் கையாள்வார் என்றும், தான் சட்டமா அதிபர் திணைக்களத்தைக் கையாள்வதாகவும் ரகித ராஜபக்ஷ போதைப்பொருள் மன்னனின் மனைவிக்கு நேரடியாக உறுதியளித்ததாக நீதிமன்றப் பதிவுகள் காட்டுகின்றன.

இந்தப்பணப் பரிமாற்றம் துபாயில் (Dubai) இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 120 மில்லியன் ரூபாய்க்கு நிகரான ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்களை (UAE Dirhams) மதுவந்தி சந்தேகநபர்களிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் இத்தொகையை ‘உண்டியல்’ (Undiyal) முறையற்ற நிதி நெட்வொர்க் மூலம் சந்தேகநபர்கள் இலங்கைக்குக் கடத்தியுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பதிவுகளின்படி, சந்தேகநபர்கள் 2023 மார்ச் இறுதியில் ஒன்றாகத் துபாய் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் தங்களது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதுடன், ‘ஹரக் கட்டா’ தொடர்ந்து உயர் பாதுகாப்புத் தடுப்புக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். இதனால் மதுவந்தி தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, பெரும்பாலான பணம் ஏற்கனவே ரகித ராஜபக்ஷவினால் செலவழிக்கப்பட்டுவிட்டதால் அதை மீட்டெடுக்க முடியாது என அபேசிங்க தெரிவித்துள்ளார். எனினும், பின்னர் ஒரு கூட்டாளி மூலம் 20 மில்லியன் ரூபாய் மட்டும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் மற்றும் சட்டத் துறைகளுக்குள் ஊடுருவியுள்ள போதைப்பொருள் நெட்வொர்க் மற்றும் முறையான ஊழல்களின் பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இந்த உயர் மட்ட வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை