இந்தியாவில் இடம்பெற்ற ஆப்கான் தூதரக நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
புதுடில்லியில் ஆப்கான் வெளிவிவகார அமைச்சரின் செய்தியாளர் மாநாட்டில் பெண் ஊடகவியலாளர்கள் தவிர்க்கப்பட்டமை குறித்து இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தாததை பலர் கண்டித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முட்டாஹியின் செய்தியாளர் மாநாட்டில் 16 பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவிருந்தனர் எனினும் பெண் ஊடகவியலாளர்களும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிகழ்விற்கும் தனக்கும் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் அழைக்கப்படவில்லை என தலிபான் அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரிய ஒருங்கிணைப்பின்மையால் பெண் பத்திரிகையாளர்கள் தவிர்;க்கப்பட்டனர் அடுத்த செய்தியாளர் மாநாட்டிற்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள் என தலிபான் வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி இவ்வாறான நிகழ்வை அனுமதித்ததன் மூலம் நரேந்திரமோடி இந்திய பெண்களை பார்த்து நீங்கள் அவர்களை (தலிபான்கள்) எதிர்த்து நிற்பதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
