12.5% அமெரிக்க இறக்குமதி வரியைத் தவிர்க்க அரசாங்கம் எதிர்பார்ப்பு

அமெரிக்கத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை

ஜூலை 24ஆம் தேதி காலக்கெடுவுக்கு முன்னர் உடன்பாட்டை எட்டுவதே இலக்கு

பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை எட்டியுள்ளன

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டு, வரும் ஜூலை 24 அன்று அமலுக்கு வரவிருக்கும் 12.5% அபராத இறக்குமதி வரியை (Penalty tariff), அதற்கு முற்பட்ட காலப்பகுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலம் இலங்கை தவிர்க்க முடியும் என வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

‘த சண்டே மோர்னிங் பிசினஸ்’ (The Sunday Morning Business) நாளிதழுக்கு கருத்துத் தெரிவித்த வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலந்திரராஜா, இந்த இறக்குமதி வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்கத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

கட்டாய உழைப்பைப் (Forced labour) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியை போதுமான அளவு தடை செய்யத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே, இலங்கை போன்ற நாடுகள் மீது இந்த 12.5% வரி விதிக்கப்படவுள்ளது.

ஜூலை 24ஆம் தேதி இது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவது இந்த அபராத வரியிலிருந்து இலங்கை தப்பிக்க உதவும் என்று அரசாங்கம் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாக விமலந்திரராஜா தெரிவித்தார்.

“இது ஜூலை 24 முதல் தான் அமலுக்கு வரும். அதற்கு முன் அவர்களுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக உடன்படிக்கையில் எம்மால் கையெழுத்திட முடிந்தால், இதைத் தவிர்க்கலாம்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட வர்த்தக உடன்படிக்கை எதனை உள்ளடக்கும் என்பது குறித்த எந்தவொரு விபரத்தையும் இந்த கட்டத்தில் வெளியிட செயலாளர் மறுத்துவிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இலங்கை தனது ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைகளுக்கு தேவையான இறக்குமதிகளில் பெருமளவில் தங்கியுள்ளதைக் கருத்திற் கொண்டு, காலக்கெடுவுக்கு முன்னர் அமெரிக்காவுடன் இந்த வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவது ஓரளவுக்கு நிவாரணத்தை வழங்கும் என இலங்கை நம்புவதாக விமலந்திரராஜா குறிப்பிட்டார்.

கட்டாய உழைப்பு இறக்குமதித் தடைகளை விதித்துள்ள, பரஸ்பர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ள அல்லது சில கட்டாய உழைப்புப் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கும் பகுதி ரீதியான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளுக்கு மாத்திரம் 10% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், இலங்கை உட்பட ஏனைய அனைத்து நாடுகளுக்கும் 12.5% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) ஜூன் 2 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்திருந்தது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) இந்த முன்மொழிவை பிரத்தியேகமாக ஆய்வு செய்துள்ள ராய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை, இந்த 10% வரி விகிதத்திற்கான வர்த்தக அளவுகோல்களைப் பூர்த்தி செய்துள்ள 14 பொருளாதார நாடுகள் கனடா, ஈக்வடார், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பங்களாதேஷ், கம்போடியா, எல் சால்வடார், குவாத்தமலா, மலேசியா, தைவான் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) எனத் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்