வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர்களது 1987 O/L பிரிவு அணியினர் ஆண்டுதோறும் கல்லூரியில் உயர்தரம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சகல பாடங்களுக்குமான கடந்தகால வினாவிடைப்புத்தகங்களை வழங்கியுதவும் திட்டத்தின்கீழ் இவ்வருடமும் (2026) ரூபா 500,000.00பெறுமானமுடைய புத்தகத் தொகுதிகளை மாணவர்களுக்கு வழங்கியுதவியுள்ளனர்.
இந் நிகழ்வு அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அணியைச்சார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் -ஐக்கிய இராச்சியம், உறவுகளால் மாகாண மட்டத்தில் முதலாம் நிலை வெற்றி பெற்று தேசிய மட்ட கரம் போட்டிக்குச் செல்லும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரூபா 110,000 பெறுமதி உடைய ஒரு கரம் போட் கொள்வனவு செய்யப்பட்டு மாணவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவியை வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை வெற்றிக்கு உதவிய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு கல்லூரி சமூகம் நன்றி தெரிவித்துள்ளது
