நிலக்கரி கொள்வனவு மோசடி விசாரணை: நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பிரதிப் பொது முகாமையாளருக்கு நாளை மீண்டும் அழைப்பு!

நிலக்கரி கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) மூன்றாவது நாளாகவும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

இதற்கமைய, நுரைச்சோலையிலுள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.பி.எம். துஷான் அபேகோன் மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதிப் பொது முகாமையாளர் ஏ.பி.எம். துஷான் அபேகோன், முன்னதாக கடந்த புதன்கிழமை (ஜூலை 8 ஆம் திகதி) சாட்சியமளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக நான்கு அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாட்சியமளித்த ஏனைய அதிகாரிகள் மின்சக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சோ, அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் மற்றும் கம்பனிகள் பதிவாளர் ஷியாமா ஹர்ஷனி ஆகியோராவர்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கங்கா வாகிஸ்த ஆராச்சி மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அஞ்சலோ வான் ஹவுட் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அதிகாரிகள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்த சத்தியக்கடதாசிகளின் (affidavits) அடிப்படையிலேயே இந்த விசாரணை மற்றும் கேள்விகள் கேட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சாட்சிய விசாரணை அமர்வுகள் வரவிருக்கும் வாரங்களிலும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பந்துலசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணையை நடத்துவதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்