போலி இறக்குமதி ஆவணங்கள் – $715 மில்லியன் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தல்!

கொழும்பு, ஜூலை 22: போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் மூலம் உழைக்கப்பட்டதாகக் கருதப்படும் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 240 பில்லியன் ரூபா) போலி இறக்குமதி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் பொலிஸார் பாராளுமன்ற நிதியியல் பற்றிய குழுவிடம் (CoPF) தெரிவித்துள்ளனர்.

இறக்குமதிகளுக்காக முன்ப்பணமாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விவரித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT) மூலம் இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கு இணையான எந்தவொரு பொருட்களும் நாட்டிற்குள் வரவில்லை என ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் கூற்றை சரிபார்ப்பதற்காக மத்திய வங்கி மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கோப் குழு விசாரணை நடத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று மீண்டும் கூடிய இக்குழு, வங்கிகள், சுங்கத் திணைக்களம் மற்றும் நிதியமைச்சின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஆகியவற்றிற்கு இடையே ஒருங்கிணைப்பு குறைபாடுகள் மற்றும் கண்காணிப்பு பலவீனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

“அரசு மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் தேவைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள இந்த இடைவெளிகளையே மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தில் ‘தகுதியான இறக்குமதியாளராக’ (Eligible Importer) பதிவு செய்வதற்குரிய சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முறையான வர்த்தகர்களுக்கு மேலதிகக் கட்டுப்பாடுகளை விதிக்காமல், குற்றவாளிகளைக் பிடிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை வலுப்படுத்துவதே குழுவின் நோக்கம் என்றார்.

இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகப் பல நிறுவனங்கள் அடங்கிய கூட்டுக்குழு (Multi-agency committee) ஒன்றை அமைக்குமாறு நிதியியல் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து