டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதுஇ இதனால் விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன
இருப்பினும்இ உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
பிற்பகல் 2:34 மணிக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயைக் கட்டுப்படுத்த 25 வாகனங்கள் போராடி வருகின்றனஇ மேலும் 11 வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இதற்கிடையில் தீயணைப்புப் படையினருக்கு உதவ விமானப்படை முன்வந்தது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர மற்ற தொடர்புடைய படைகளும் சம்பவ இடத்தை அடைய முயற்சி செய்கின்றன.
விமான நிலையத்தில் அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உதவி இயக்குநர் கவ்சர் மஹ்மூத் தெரிவித்தார்.