ஜப்பானில் வாகன விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (ஏஐயுடு) தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அனுமதியளிக்கப்படாதவாகன இறக்குமதிகள் உள்ளூர் சந்தையில் பதிவு செய்யப்படாத வாகனங்களின் தேக்கத்தை ஏற்படுத்தி விற்பனையைப் .பாதித்துள்ளன.
மத்திய வங்கி தரவுகளின்படி ஜனவரி மற்றும் ஆகஸ்ட் 2025 க்கு இடையில் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளனர்.

“விலை மாற்றங்களில் பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் இசட் ப்ளே 2025 எஸ்யூவி Honda Vezel Z Play 2025 SUV இப்போது ரூ. 23.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது இது ரூ. 25.5 மில்லியனில் இருந்து குறைந்துள்ளது. டொயோட்டா யாரிஸ் Toyota Yaris ரூ. 11.5 மில்லியனில் இருந்து ரூ. 10.5 மில்லியனாகக் குறைந்துள்ளது அதே நேரத்தில் சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் Suzuki Alto Hybridஇப்போது ரூ. 7.3 மில்லியனாக ரூ. 7.9 மில்லியனில் இருந்து ரூ. 7.3 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுசுகி வேகன் ஆர் Suzuki Wagon காரும் ரூ. 7.8 மில்லியனில் இருந்து ரூ. 7.3 மில்லியனாகக் குறைந்துள்ளது”
இலங்கையின் இறக்குமதி செய்யப்பட்ட வாகனச் சந்தையில் Toyota முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது ரேய்ஸ் மற்றும் யாரிஸ் Raize and Yarisமாடல்கள் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. எஸ்யூவி பிரிவில் LC300 and Prado முன்னிலை வகிக்கின்றன அதே நேரத்தில் டொயோட்டா டபுள் கேப் மற்றும் ஃபோர்டு ராப்டர் மூன்றாவது மிகவும் பிரபலமான வாகனங்களாக உள்ளன.
