இந்திய பத்திரிகையாளரும் தி ஃபைன்பிரிண்ட் தலைமை ஆசிரியருமான நீல் போரேட் கொழும்பின் அடையாளச் சின்னமான காலி முகத்திடல் நடைபாதை பாராட்டியுள்ளார் அதை மும்பையுடன்ஒப்பிட்டுள்ளார்.
வியாபாரிகள்வணிகர்கள் மற்றும் பெரிய கூட்டத்தினரால் நிரம்பியிருந்தாலும் காலிமுகதத்திடலை சுத்தமாக வைத்திருப்பதற்கு எவ்வளவு சிறப்பாக செயற்படுகின்றனர்என்பதைஅவர் பாராட்டியுள்ளார். “ஒரு நகரத்தில் வியாபாரிகள் மற்றும் கூட்டத்தினருடன் ஒரு நடைபாதை எப்படி மிகவும் சுத்தமானதாக காணப்படுகின்றது அதனை சுத்தமாக வைத்திருப்பதற்காக பாடுபடுகின்றனர் இது கொழும்பு காலிமுகத்திடல் -அவர்களால் முடியும் என்றால் ஏன் மும்பாயால் முடியாது என அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்

தீபாவளியைக் கொண்டாட இலங்கைக்குத் திரும்பி வந்ததாகவும் இந்தியர்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள ஊக்குவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை “இந்தியாவிற்கு நெருக்கமானது மலிவு விலையில் உள்ளது மற்றும் முற்றிலும் பிரமிக்க வைக்கிறது” என்று விவரித்துள்ளார்
அவரது கருத்துக்கள் ஆன்லைனில் கவனத்தை ஈர்த்துள்ளன பல பயனர்கள் பொது இடங்களைப் பராமரிப்பதிலும் நகர்ப்புறங்களில் தூய்மையை மேம்படுத்துவதிலும் இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.
