இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பச்சைகுத்திக்கொள்வதாலோ அல்லது தலைமுடியை நீளமாக வளர்ப்பதாலோ ஒருவரை சிறைக்கு அனுப்பாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பற்றிய தவறான அர்த்தப்படுத்தல்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன,இதன் மூலம் பொதுமக்களிடம் தேவையற்ற அச்சம் உருவாகின்றது.
குறிப்பிட்ட சட்டமூலம் பச்சை குத்தும் அல்லது தலைமுடியை நீளமாக வளர்க்கும் ஒருவரை சிறைக்கு அனுப்பும் என சில தனிநபர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் விரும்பும் ஆடையை அணிவது பச்சை குத்துவது தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொள்வது உங்களது தனிமனித உரிமை.
சட்டமூலத்தில் ஒரு நபர் ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற குழுவை சேர்ந்தவர் என்பதை தீர்மானிப்பதற்காக கருத்தில் கொள்ளவேண்டிய 12 விடயங்களை குறிப்பிடுகின்றது.
அதில்ஒருவிடயமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினரால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஆடைபாணிகள்,கைசைகள், மொழி அல்லது பச்சை குத்துதல் ஆகிய குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும் இவை தனிப்பட்ட குற்றச்செயல்கள் அல்ல,சாதாரண நபர்களின் தோற்றத்தை விட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் தொடர்புகொண்டிருப்பதையே இது குறிப்பிடுகி;ன்றது.
சட்டமூலத்தில் காணப்படும் இந்த ஏற்பாட்டை ஏற்ககூடிய அனுமானம் எனலாம்,இது குற்றத்திற்கான உறுதியான ஆதரமாக அமையாது.
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(ரி)