சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமார் தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த குழுவின் பரிந்துரைகளை பௌத்தமத தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பௌத்த மத பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு பௌத்தமத தலைவர்கள் தங்கள் அங்கீகாரத்தை வழங்கினார்கள்.
ஞானசாரதேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் களையப்பட்டமை மற்றும் இந்த விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதே இந்த சந்திப்பின்நோக்கம் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.