பொதுபலசேனாவின் ஞானசாரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராகவோ அல்லது முரணாகவோ அரசாங்கத்தினால் செயற்படமுடியாது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தே ஞானசாரதேரருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தும் உறுதியுடன்தான் அரசாங்கம் ஆட்சிக்குவந்தது,பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அஞ்சி நீதிமன்ற தீர்ப்பை மீற அரசாங்கத்தால் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.