யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனிற்கான நீதிக்காக காத்திருத்தல்

https://www.himalmag.com/

Published:

இனமோதல் கடும் ஆறாத காயங்களை விட்டுச்சென்றுள்ள இலங்கையில் ஏனைய பத்திரிகையாளர்கள் அச்சம் காரணமாக சொல்ல தயங்கிய கதைகளை சில பத்திரிகையாளர்கள் சொல்லதுணிந்தனர்.
இலங்கையின் மிகநீண்டகால இனமோதலின் போது யுத்தத்தினால் பெரும் அழிவை எதிர்கொண்ட யாழ்ப்பாணத்தின் சுயாதீனமான குரல்களில் ஒன்றாக கருதப்பட்டவர் மயில்வாகனம் நிமலராஜன்.
பிபிசியின் தமிழோசை சந்தேசிய ராவய உட்பட பலவற்றிற்கு அவர் செய்திகளை வழங்கினார்.
தேர்தல் வன்முறைகள் துணைஇராணுவகுழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அவர் செய்திகளை வழங்கினார்.
ஆனால் அவரது துணிச்சலுக்காக அவர் ஒரு விலையை செலுத்தவேண்டியிருந்தது.
ஓக்டோபர் 19 2000 இல் துப்பாக்கிதாரிகள் அவரது ஊடகப்பணியை தங்களின் துப்பாக்கிரவைகள் மூலம் மௌனமாக்கினார்கள்.அவரது படுகொலை அக்காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருந்த மிகவும் ஆபத்தான நிலையை வெளிப்படுத்தியதுடன் அவரது குடும்பத்தினரையும் சக ஊடகவியலாளர்களையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளுடன் போராடும் நிலைக்கு தள்ளியது.
25வருடங்களுக்கு பின்னர் அவரது சகோதரி நிமலராணி புதிய அரசாங்கம் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்திற்கு முடிவை காணும் என நம்பிக்கையை வெளியிட்டார்.

கொழும்பு வாழ்க்கை
1970 களில் நிமலராணி தனது சகோதரரின் மடியில் இருப்பதை விரும்புவார்,காலையோ மாலையோ அதுவே அவருக்கு பிடித்த ஆசனம்.ஒரு தசாப்காலத்தின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறும் வரை அவர் பாதுகாத்த பொக்கிஷம் அந்த நினைவுகளே
தனது சகோதரன் தன்னை அணைத்துகொண்டு கதைகள் சொல்வதை அவர் நினைவுகூர்ந்தார்.
“அவர் எனது சகோதரர் இல்லை எனது அப்பாவின் மறுஉருவம்’’ என உணர்ச்சிவசப்பட்ட குரலில் அவர் தெரிவித்தார்.
1995 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த நிமலராணி அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்துவருகின்றார்.

01•rapport Sri Lanka fr.indd

1999 இல் இலங்கைக்கு தான் மேற்கொண்ட விஜயமும் தனது சகோதாரன் தனது கணவர் பிள்ளைகளை சந்தித்த கணங்களும் அவரது நினைவில் இன்னமும் அழியாமல் உள்ளன.
எனது பிள்ளைகளை பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என நிமலராணி நினைவுகூறுகின்றார்.அவரது மகன் மாமா மோட்டார் சைக்கிளில் தனக்கு யாழ்ப்பாணத்தை சுற்றி காண்பித்ததை நினைவுகூறுகின்றார்.
அதுவே நான் இறுதியாக அவரது பார்த்த நாள் அதுதான் இறுதியாக பார்க்கும் தருணம் என நான் நினைக்கவில்லை என்கின்றார் நிமலராணி.
ஒருவருடத்தின் பின்னர் நிமலராஜனின் வீட்டிற்குள் நுழைந்து ( இரவு) ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் செய்த நபரினால் அவர் கொல்லப்பட்டார்.
நிமலராஜனின் உறவினரான பிரசன்னா தற்போது கனடாவில் வசிக்கின்றார்,சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக தனது மாமா சப்பாத்துவாங்கி தருவதற்காக தன்னை மோட்டார் சைக்கிளில் யாழ் நகரத்திற்கு கொண்டு சென்றதை நினைகூறுகின்றார்.24 மணித்தியாலத்தின் பின்னர் அவர் உயிருடன் இல்லை, பிரசன்னாவுக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டன.
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஊரடங்குவேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
நிமலராஜன் கொல்லப்பட்ட தருணம் இலங்கை மிகமோசமான உள்நாட்டு யுத்தத்தில் சிக்குண்டிருந்தது.தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உள்நாட்டு மோதல் யாழ்ப்பாணத்தில் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட துருவமயமாக்கப்பட்ட நிலையை ஏற்படுத்தியிருந்தது.
அதிகளவான இனப்பதற்றம் தேர்தல் வன்முறைகள் மாற்றுக்கருத்து உடையவர்களை ஒடுக்குதல் போன்றன காணப்பட்ட அரசியல் சூழ்நிலை நிலவியது,
யுத்த குற்றங்களை அம்பலப்படுத்தியமைக்கா பத்திரிகையாளர்கள் இராணுவத்தினர் துணை இராணுவக்குழுக்கள் உட்பட அனைத்து தரப்பினரினதும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தனர்.
அந்த வருடம் மேமாதம் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் யாழ்;ப்பாணத்தின் உதயன் நாளிதழை தடை செய்ததுடன் பிபிசி சிஎன்என் போன்றவற்றின் ஒலிபரப்பையும் முடக்கியது.
யாழ்ப்பாணத்தின் பலாலியில் இடம்பெற்ற மோதலில் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளை தெரிவித்தமைக்காக பத்திரிகை தணிக்கை விதிமுறைகளின் கீழ் கொழும்பில் சண்டேலீடரும், இரிதா பெரமுனவும் மூடப்பட்டன.

அவ்வேளை அனைத்து செய்திகளையும் தகுதிவாய்ந்த அதிகாரி என்பவரின் அனுமதியுடனேயே வெளியிடவேண்டு;ம் என்ற நடைமுறை காணப்பட்டது.இராணுவ மோதல்கள் இலங்கை இராணுவத்தினரின் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் தணிக்கை செய்யப்படும் அல்லது மட்டுப்படுத்தப்படும் ஆபத்து நிலவியது.
இவ்வாறான பின்னணியில் இடம்பெற்ற 2000 தேர்தல்கள் கள்ளவாக்குகள்,வன்முறைகள் போன்றவற்றுடனேயே இடம்பெற்றன, சந்திரிகா தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தார்.
நிமலராஜனின் அச்சமற்ற ஊடகப்பணி அவ்வேளை அதிகாரத்துடன் வலுவானவர்களாக காணப்பட்ட சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக அவர் கொலை செய்யப்பட்டார்.
நிமலராஜன் உயிரிழந்தவேளை அவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் அனைவரும் ஐந்துவயதிற்கு உட்பட்டவர்கள்.
இந்த படுகொலையின் பின்னர் ஆறு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.நீண்ட நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் 2021 மே மாதம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவின் பேரிலேயே அவர் இதனை செய்தார்.
அவ்வேளை ஆறு சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டில் இருந்தனர்.
நிமலராஜனின் செய்திகளுக்காக துணை இராணுவகுழுவாக ஆரம்பித்து அரசியல்கட்சியாக மாறிய ஈபிடிபியே இந்த கொலையை செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.எனினும் அந்த கட்சி அதனை நிராகரித்துள்ளது. ஈபிடிபி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அதன் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள்.
உள்நாட்டு யுத்தத்தின்போது ஈபிடிபி பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டை எதிர்கொண்டது.கப்பம் பலவந்தமாக காணாமல்போகச்செய்தல்,சித்திரவதை சட்டவிரோத படுகொலை குறிப்பாக யாழ்குடாநாட்டில்.கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 2024 தேர்தலில் தோல்வியடைந்தார்.
சமீபத்தைய நாடாளுமன்ற தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை வெளிப்படுத்தியமைக்காகவே நிமலராஜன் கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளுர் பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு அவ்வேளை தெரிவித்திருந்தது.
தனது சகோதரன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார் என நிமலராணி தெரிவித்தார்.
எனது சகோதரன் பல தடவை மிரட்டல்களை எதிர்கொண்டார் ஒருநாள் எனது தாயார் தொலைபேசியை எடுத்தவேளை உனது மகன் விரைவில்உயிரிழக்கப்போகின்றான் என ஒருவர் எச்சரித்தார் என நிமலராணி தெரிவித்தார்.

இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை நினைவு கூரும் ‘கருப்பு ஜனவரி’ (Black January) தொடரின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஊடக சுதந்திர அமைப்பின் (Free Media Movement) பங்களிப்புடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டது

 

நிருபர் இணையத்தளத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியின் ஒருபகுதியாக இந்த கட்டுரை பிரசுரமாகின்றது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

bimal
செம்மணி மனித புதைகுழி- எந்தவொரு தனிநபரும் இறுதி முடிவினை முன்வைக்க முடியாது – வெளிநாட்டுஅமைப்புகள் உள்நாட்டு பொறிமுறையை சிதைப்பதற்கு அனுமதிக்ககூடாது- அமைச்சர் பிமல்
Mujibur-Rahman-L
ஈரானிய கப்பல்களில் உள்ளவர்களுக்கு குடிப்பதற்கான நீரை கூட வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது – முஜிபூர்
Police-1
வஸ்கவிய எனப்படும் சாபக்கவிதைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமைக்காக எவரையும் விசாரணை செய்யவில்லை – பொலிஸ் ஊடகப்பிரிவு
Raj-Somadeva
தொற்றுநோய் மரணங்களா அல்லது சாட்சியங்களை அழிக்கும் முயற்சியா? பேராசிரியர் சோமதேவாவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்கள்
fe4ab0b7-b072-4987-8290-5662176a30b2
இலங்கையில் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ள ஜனாதிபதியை இலக்குவைத்து இயற்றப்பட்ட வஸ்கவிய ( சாபக்கவிதைகள்)
ukra war
ரஸ்ய உக்ரைன் மோதல்- கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை ரஸ்யாவிடம் கையளித்தனர் உக்ரைன் அதிகாரிகள்
arrest-monk-protest
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் கத்தியுடன் நபர்
16930815621492431198
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை
kasap
ஜனாதிபதி ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் - கஸ்ஸப்ப தேரர்
gajendra
ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்