இந்தியாவில் சமீபத்தில் இருமல்மருந்தினால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிராந்திய நாடுகள் எச்சரிக்கையுடன் உள்ள அதேவேளை உளளுர் சந்தைகளில் பாதுகாப்பற்ற மருந்துகள் குறித்து இலங்கையும் எச்சரிக்கையுடன் உள்ளது.
அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயற்பட்டாலும் அவசரமாக மருந்து கொள்வனவு செய்யப்படும்போது இந்தியாவிலிருந்து தரமற்ற மருந்துகள் இலங்கைக்குள் நுழையக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் காலத்தின் போது இவ்வாறான தரமற்ற மருந்துகள் இலங்கைக்குள் நுழைந்ததுடன் உயிரிழப்பும் இடம்பெற்றது.
இவ்வாறான சூழமைவிலேயே இலங்கை அதிகாரிகள் இது குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்துகின்றனர்.
குறிப்பிட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகளின் உயிர்களிற்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.இந்தியாவின் மத்தியபிரதேசத்தில்ஐந்து வயதிற்கும் குறைவான பிள்ளைகளின் மரணத்திற்கு இந்த மருந்தே காரணம் என தெரிவித்துள்ளது.
எனினும் குறிப்பிட்ட இருமல் மருந்தும் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனமும் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
