இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆறு முதல் ஏழு வீதமாக அதிகரிக்கவேண்டுமென்றால் இலங்கையின் முதலீடுகள் 30வீதத்திற்கும் அதிகமானதாக காணப்படவேண்டு;ம் என தெரிவித்துள்ள இந்தியாவின் பொருளாதார நிபுணரான மொன்டெக் சிங் அலுவாலியா இலங்கை அரசாங்கம் முதலீடுகளை 30 வீதத்திற்கும் அதிகமானதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
20 வீத முதலீடு என்பது பொருளாதார வளர்ச்சிக்கு போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டு சவால்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் சர்வதேச அளவில் அது கடும் சவால்கள் போட்டிகளை எதிர்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலீட்டு விகிதம் சுமார் 20 சதவீதமே என உலக வங்கியின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து கருத்து தெரிவித்துள்ள அவர்
இலங்கை இன்னும் பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய மீட்சி மற்றும் வளர்ச்சியின் கட்டத்தில் உள்ளது நாடு அதன் பிரச்சினைகளை சரிசெய்வதுடன் கடந்த காலத்தை விட கடினமான உலகத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.