உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ரஸ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சர்வதேச சந்தையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உக்ரைன் நேசநாடுகள் உறுதியளித்துள்ளன.
ரஸ்யாவின் யுத்த இயந்திரத்திற்கான நிதியை நாங்கள் முடக்குகின்றோம்,நிதி கிடைக்கின்ற வழிவகைகளை முடக்குகின்றோம் என பிரிட்டிஸ் பிரதமர்கேய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்
லண்டனில் விருப்பமுள்ளவர்களின் கூட்டணி உச்சிமாநாட்டை நடத்திய பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உச்சிமாநாட்டின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசிய பிரிட்டிஸ் பிரதமர் புட்டின் சமாதானம் குறித்து உண்மையான அக்கறையை கொண்டிருக்கவில்லை,இதன் காரணமாக உக்ரைனிற்கு ஆதரவான தெளிவான திட்டம் அவசியம் என உக்ரைனின் நேசநாடுகள் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் பிரிட்டனும் கடந்த சில நாட்களி;ற்கு முன்னர் ரஸ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.