வெலிகம பிரதேசசபை தலைவரின் கொலையை தொடர்ந்து நாடு மேலும் பல அரசியல் கொலைகளை சந்திக்கப்போகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு குழுவினர் தனது வீட்டிற்கு சென்று எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என விசாரித்தனர் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தொடர்ச்சியாக அரசியல் படுகொலைகளை பார்க்கப்போகின்றோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
