சுமார் 15000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளிலும் போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதால் இலங்கை மிகவும் பாரதூரமான பொது சுகாதார ஆபத்தை எதிர்கொள்கின்றது.
உடனடியாக இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எச்ஐவி உட்பட பாலியல் தொற்று நோய்கள் பல மடங்காக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளவியரீதியில் 127511 மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய எஸ்டிடி எயிட் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்,போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துபவர்கள்,உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த புள்ளிவிபரங்கள் முழுமையானவை அல்ல பதிவு செய்யப்படாத பலர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
35000 பெண் பாலியல் தொழிலாளர்களும் 80000 ஆண்ஓரினச்சேர்க்கையாளர்களும் 3011 ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்துபவர்களும் எச்ஐவி ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என மருத்துவ சிவில் உரிமைமருத்துவ சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
தற்போது 6000 பேர் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர் அனேகமாக மேல்மாகாணத்தில் என தெரிவித்துள்ள அவர்காலி கண்டி குருநாகல அனுராhதபுர மாத்தறை பதுளை ஆகிய பகுதிகளிலும் பல எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
