அமெரிக்க சீன தலைவர்களிடையே அடுத்த வாரம் மலேசியாவில் சந்திப்பு இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக முயற்சிகளில் இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் வர்த்தக போர் மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியாவில் அமெரிக்க சீன அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றுள்ளது.
பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான விதத்தில் இடம்பெற்றதாக அமெரிக்காவின் திறைசேரி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறுவதை உறுதி செய்வதன் மூலம் வர்த்தக போர் மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தென்கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்க சீன தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் அது முன்னோக்கி நகர்வதற்கான பாதையை உருவாக்கும்.
அரியபூமி காந்தங்கள் மற்றும் தாதுக்கள் மீதான ஏற்றுமதிமீது சீனா தனது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியதை தொடர்ந்து அந்த நாட்டிற்கு எதிராக நவம்பர் முதலாம் திகதி முதல் 100 வீத வரியை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
இதேவேளை ஆசிய நாடுகளிற்கான தனது விஜயத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடிய விடயங்களை கோடிட்டுக்காட்டியுள்ளார்.
அமெரிக்க சோயபீன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக சீனா விதித்துள்ள தடைகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,தாய்வான் தனது பகுதி என குறி;ப்பிடும் ஜனநாயக தீவான தாய்வான் குறித்தும் பேசவேண்டும்என தெரிவித்துள்ள டிரம்ப் தாய்வானிற்கு விஜயம் மேற்கொள்ளும் நோக்கமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹொங்கொங்கின் ஊடககோடீஸ்வரர் ஜிம்மி லாயின் விடுதலை குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
