அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்
பிபிசிக்கான தனது பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்’’ நான் ஒருநாள் ஒருவேளை நான் அமெரிக்க ஜனாதிபதியாவேன்,’’ என தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாவேன் என நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
2028 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ள கமலாஹரிஸ் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தான் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஊடகங்கள் தெரிவிப்பதை நிராகரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியை ஒரு கொடுங்கோலன் என முத்திரை குத்தியுள்ள கமலா ஹரிஸ் நான் அவரை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை என உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி போட்டியில் வெள்ளை மாளிகைக்காக தான் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள கமலா ஹரிஸ் தனது பேத்திகள் அவர்களின் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு பெண் ஜனாதிபதியை பார்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
அது நீங்களா என்ற கேள்விக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை ஆனால் அரசியலில் இன்னமும் எதிர்காலம் உள்ளதாக கருதுகின்றேன் எனது கதை முடிந்துவிடவில்லை நான் எனது வாழ்க்கை முழுவதையும் சேவையில் செலவிட்டிருக்கின்றேன் அது எனது உடலில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
