வேலணை பிரதேசபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும் கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது பிரதேசசபையின் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற் கட்டடங்களை நிர்மாணிக்கவேண்டும் என வேலணை பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அண்மைக்காலமாக பிரதேசசபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதில்பலர் முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களுடாக உறுதி செய்ய முடிகின்றது.
இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில்கொள்ளப்படும்.
அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீத சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பிரதேசசபை நிர்ப்பந்திக்கப்படும் நிலை உண்டாகும்.