போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு வலுவான மக்கள் இயக்கமொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
முழுநாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களும்போதைப்பொருள் வர்த்தகர்களும் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிடவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போதைப்பொருளால் உருவாகும் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும் இராணுவத்தினர் பொலிஸார் மாத்திரம் தனித்து இதனை சாதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்