போதைப்பொருட்கள் குற்றங்களிற்காக மூன்றுமாத குழந்தையுடன் குடும்பமொன்றை பொலிஸார் கைதுசெய்ததாகவும் அந்த குழந்தையின் குருதியில் போதைப்பொருளுக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சில நாட்களின் முன்னர் நான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை சந்தித்தேன்.
அவர் சமீபத்தைய கைது குறித்து குறிப்பிட்டார்.தாய் தந்தையும் மூன்றுமாத குழந்தையுடன் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களிற்காக கைதுசெய்துள்ளனர்.
அதிர்ச்சிதரும் வகையில் குழந்தையின் குருதியில் போதைப்பொருளிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
நான் முதலில் தாய்பால் ஊடாக குழந்தையின் குருதியில் கலந்திருக்கலாம் என நினைத்தேன் ஆனால் இல்லை பிள்ளைக்கு வழங்கியுள்ளனர்.
இவ்வாறன கதைகள் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் பெரியவர்களுடன் மாத்திரம் தொடர்புபட்டதல்ல என்பதை இந்த கதைகள் வேதனை தரும் விதத்தில் நினைவுபடுத்துகின்றன.
போதைப்பொருள் தற்போது சிறுவர்கள் குழந்தைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
கொழும்பு நகரம் இதன் பாரதூரமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே நாங்கள் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நன்றியுடையவர்களாக உள்ளோம்.
போதைப்பொருள் பாவனை குடும்பங்கள் மீது ஏற்படுத்தும் மிக மோசமான பாதிப்பை ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.அதேவேளை சுங்கம் பொலிஸ்போன்ற துறைகளை சீர்திருத்தவேண்டிய அவசிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குற்றக்கும்பலுடன் தொடர்புடையவர்களிற்கு எந்த புகலிடமும் வழங்கப்படாது.
இது கடினமான போர் ஆனால் நாங்கள் அனைவரும் இணைந்து செய்யவேண்டிய போர்.
