வெங்காய உருளைக்கிழங்கு விவசாயிகளிற்கு ஆகக்கூடியளவு விலையை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது ஆனால் இது விலை அதிகரிப்பை ஏற்படுத்தி நுகர்வோரின் சுமையை அதிகரிக்கும் என விவசாய துறை அமைச்சர் கேடி லால்காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்காயத்திற்கு ஆதரவு விலையாக கிலோவிற்கு 150 ரூபாயினை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் ஆனால் சந்தையில் நுகர்வோர் ஒருகிலோ வெங்காயத்தை 200 ரூபாய்க்கு கொள்வனவு செய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் புதிய விலை நடைமுறைக்கு வந்ததும் உருளைகிழங்கின் விலை 300 ஆக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை காணத்தயார் ஆனால் நுகர்வோர் கொள்வனவின் போது அதிக விலையை செலுத்தவேண்டியிருக்கும் அதன் பின்னர் யாரும் குற்றம்சாட்டக்கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
