அமேசானை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திலும் பணிநீக்கம்!! எந்த துறை ஊழியர்களுக்கு பாதிப்பு?

உலகளவில் டெக் நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளன. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

வழக்கமாக ஆப்பிள நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுக்காது. இதுவரை செய்திகளில் கூட ஆப்பிள் பணிநீக்கம் நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால் இந்த ஆண்டு திடீரென தங்கள் நிறுவனத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது. குறிப்பாக தங்கள் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களை இந்த முறை பெருமளவில் பணி நீக்கம் செய்திருக்கிறது.


எத்தனை பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால் ப்ளூம்பெர்க் தகவலின் படி கணிசமான நபர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.

பெரிய தொழில் நிறுவனங்கள் , பள்ளிகள் மற்றும் அரசு முகமைகளோடு செயல்பட்டு வந்த அக்கவுண்ட் மேனேஜர்கள், ஆப்பிள் மையங்களில் வேலை செய்து வந்த ஊழியர்கள், நிறுவன தயாரிப்புகளை டெமோ செய்து காட்டக்கூடிய ஊழியர்கள் இந்த பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்திற்காக 20 லிருந்து 30 ஆண்டு காலம் வேலை செய்த மேலாளர்கள் பலரும் இந்த பணிநீக்க நடவடிக்கையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை மற்றும் நீதித்துறையோடு இணைந்து செயல்பட்டு வந்த விற்பனை பிரிவை சேர்ந்த ஊழியர்கள் தான் பெருமளவில் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தின் விற்பனை பிரிவை மறு கட்டமைப்பு செய்து வருவதாக தெரிவித்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது மீண்டும் அந்த பதவிகளுக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.

இப்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் ஆப்பிள் நிறுவனத்திற்கு உள்ளாகவே வேறு பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பினை பெறுவார்கள். ஒருவேளை அதற்குள் அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு உள்ளே வேறு வேலை கிடைக்கவில்லை எனும் போது அவர்களுக்கு நிதி சார்ந்த இழப்பீடுகள் வழங்கப்படும்.

ஆப்பிள் நிறுவனம் இந்த டிசம்பர் காலாண்டில் 140 பில்லியன் வருவாய் என்ற வரலாற்று சாதனை எட்ட இருக்கும் சூழலில் ஆப்பிள் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்திருப்பது ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 237 நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு