பிரிட்டனில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்படவிருந்த மிகப்பெரிய பயங்கரவாதச் சதி முறியடிப்பு

GUARDIAN

ஐஎஸ் (Islamic State) அமைப்புக்கு விசுவாசப் பிரமாணம் செய்த இருவர், “முடிந்தவரை அதிகமான யூதர்களைக் கொல்ல” சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். இந்தச் சதி முறியடிக்கப்படாமல் இருந்திருந்தால், இது ஐக்கிய இராச்சியத்தின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இருந்திருக்கும் என  அதிகாரிகள் நம்புகின்றனர்.

38 வயதான வாலித் சாடாவி (Walid Saadaoui) மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் (Amar Hussein) ஆகிய இருவரும், 2023 டிசம்பர் 13 முதல் 2024 மே 9 வரை பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாரானதாகக் கடந்த  பிரஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

சதித் திட்டம்

இவர்கள் யூத மக்கள் மீது கடும் வெறுப்புக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. காசா போர் வெடித்த பிறகு ஐஎஸ் அமைப்பு விடுத்த “ஆயுதம் ஏந்துங்கள்” என்ற அழைப்பை ஏற்று, ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத சமூகங்களில் ஒன்றான கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) பகுதியில் ஒரு பெரும் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வாலித் சாடாவி  துப்பாக்கிகளை வாங்குவதற்கும் அவற்றை விநியோகிப்பதற்கும் ஏற்பாடு செய்ததோடு, தாக்குதலுக்கான இடங்களைத் தேடிச் சென்று இலக்குகளை அடைய அடையாளம் கண்டார். ஆனால், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய நபர் ஒரு இரகசியப் போலீஸ் அதிகாரி (Undercover Operative) என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

போலீஸ் அதிரடி நடவடிக்கை

‘பாரூக்’ (Farouk) என்று அவர்களுக்குத் தெரிந்த அந்த அதிகாரி, ஜிஹாதி சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, தானும் ஒரு தீவிரவாதி என்று வாலித் சடாவியை நம்ப வைத்தார்.

முன்னாள் இத்தாலிய உணவக உரிமையாளரான வாலித் சாடாவி, 2024 மே 8 அன்று போல்டன் நகரில் உள்ள ஒரு ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் வைத்து, இரண்டு தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட ஆயுதங்கள், 2015 நவம்பர் 13 அன்று பாரிஸில் 130 பேர் கொல்லப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதே வகையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற குற்றவாளிகள்

வாலித்தின் சகோதரரான 36 வயது பிலால் சாடாவி, இந்தத் பயங்கரவாதச் சதி குறித்த தகவல்களை மறைத்ததற்காகக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவர்கள் அனைவரும் துனிசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பல ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக வசித்து வந்தவர்கள். அமர் ஹுசைன் என்பவர் முன்னதாக சதாம் ஹுசைனின் இராணுவத்தில் பணியாற்றியவர்.

காவல்துறையின் கருத்து

தீர்ப்புக்குப் பிறகு பேசிய கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் வாட்சன், “யூத சமூகத்தின் மீதான குற்றவாளிகளின் வெறுப்புக்கு எல்லையே இல்லை என்பது இந்த விசாரணையின் மூலம் தெளிவாகியுள்ளது. நமது யூத நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் மீதான தாக்குதல் என்பது நம் அனைவர் மீதான தாக்குதலாகும்” என்று கூறினார்.

துணைத் தலைமை காவல்துறை அதிகாரி ராபர்ட் பாட்ஸ் கூறுகையில், “இந்தத் தாக்குதல் ஐக்கிய இராச்சிய வரலாற்றிலேயே மிகவும் கொடிய பயங்கரவாதத் தாக்குதலாக இருந்திருக்கக்கூடும். உயிர்களைக் காப்பாற்றிய அந்த இரகசிய அதிகாரி பாரூக்கின் துணிச்சலை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று பாராட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்