காரகாஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள “மிகவும் பலப்படுத்தப்பட்ட இராணுவதளத்திற்கு அமெரிக்கப் படைகள் சென்று மதுரோவை “நீதிமன்றத்தின் முன் நிறுத்த” அழைத்து வந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ நடவடிக்கையை ஈரான் மற்றும் அதன் அணுசக்தி இலக்குகளுக்கு எதிராக முன்னர் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுடன் அவர் ஒப்பிட்டுப் பேசினார். “நேற்று அமெரிக்கா சாதித்ததை உலகில் வேறு எந்த நாடும் சாதிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
தாக்குதலின் போது வெனிசுலாவின் அனைத்து இராணுவத் திறன்களும் “செயலிழக்கச் செய்யப்பட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் உள்ள “குறிப்பிட்ட நிபுணத்துவம்” காரணமாக இந்த நடவடிக்கையின் போது காரகாஸ் நகரத்தின் மின்சாரம் முழுவதுமாக அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் இப்போது “அமெரிக்க நீதியை எதிர்கொள்கிறார்கள்” என்று கூறிய டிரம்ப் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிராக அவர்கள் நடத்திய “உயிர்கொல்லி போதைப்பொருள் பயங்கரவாத”த்திற்காக நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
