பாதுகாப்பான மற்றும் முறையான ஆட்சி மாற்றம்’ ஏற்படும் வரை அமெரிக்காவே வெனிசுலாவை நிர்வகிக்கும்- டிரம்ப்

அதிகாரத்தை ஒரு “பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான முறையில் மாற்றும்” காலம் வரும் வரை, அமெரிக்காவே வெனிசுலாவை “நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் உள்ள அனைத்து அரசியல் மற்றும் ராணுவப் பிரமுகர்களும், மதுரோவுக்கு என்ன நடந்ததோ அது அவர்களுக்கும் நடக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“வெனிசுலா மக்கள் மீண்டும் சுதந்திரம் பெற்றுவிட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார். இன்றைய தினம் அமெரிக்கா ஒரு “பாதுகாப்பான” மற்றும் “பெருமிதம் கொள்ளும் நாடாக” மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

:வெனிசுலா மக்களுடனான அமெரிக்காவின் ‘கூட்டுறவு’ அவர்களை ‘செல்வந்தர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும், பாதுகாப்பானவர்களாகவும்’ மாற்றும் அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் இந்த செய்தியால் “மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்” என்று அவர் மேலும் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவர்கள் இனி துயரப்படப் போவதில்லை,” என்று தெரிவித்தார்.

மதுரோவை ஒரு “சட்டவிரோத சர்வாதிகாரி” (illegitimate dictator) என்று டிரம்ப் சாடினார். அமெரிக்காவிற்குள் “மிகப்பெரிய அளவில் உயிர்கொல்லி சட்டவிரோத போதைப்பொருட்களை” கொண்டு வந்ததற்கும் மதுரோவே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், ‘கார்டெல் டி லாஸ் சோல்ஸ்’ (Cartel de los Soles) எனும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மதுரோவே வழிநடத்தி வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மதுரோவும் அவரது மனைவியும் தற்போது ஒரு கப்பலில் நியூயார்க் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு எங்கு விசாரணை நடத்துவது என்பது குறித்து நியூயார்க் அல்லது மியாமி ஆகிய நகரங்களுக்கு இடையே விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அதன்பின்னர், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உரையாற்றினார். இன்றைய அதிகாலை நடவடிக்கையை “ஒரு பிரம்மாண்டமான கூட்டு ராணுவ மற்றும் சட்ட அமலாக்க சோதனை, இது எவ்வித குறைபாடுகளுமின்றி கச்சிதமாக (flawlessly) நிறைவேற்றப்பட்டது” என்று அவர் விவரித்தார்.

“ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது போலவே, மதுரோவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வரம்பு மீறி விளையாடிவிட்டார் (effed around),” என்று ஹெக்செத் கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்