அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பாண்டி தெரிவித்துள்ள தகவலின்படி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் மீதுநியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில்சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
போதைப்பொருள் பயங்கரவாதச் சதிபோதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது.
கோகோயின் இறக்குமதிச் சதி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கோகோயின் கடத்துவதற்குச் சதி செய்தது.
இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவு சாதனங்களை வைத்திருத்தல் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தது.
அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்தச் சதி செய்தல்: அமெரிக்க நலன்களுக்கு எதிராக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவு சாதனங்களைப் பயன்படுத்த சதித் திட்டம் தீட்டியது.
தற்போதைய நிலை
அமெரிக்க ஊடகங்களின்படி தம்பதியினரை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (ஊடீP) அமைப்பில் தகவல்களைப் பதிவு செய்வதற்கு முன் அவர்களின் உயிரியளவுகள் கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்படும்.
நியூயார்க்கில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
