வங்கக்கடல் காற்றழுத்த மண்டலம் வலுவடைவதால் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

கொழும்பு, ஜனவரி 6 — இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடைந்து, தீவின் கிழக்குக் கரையை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை அமைப்பின் வளர்ச்சியுடன், ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி:

  • இன்று இரவு: கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

  • நாளை: ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய பகுதிகள்: வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காற்று நிலைமை: மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்