டிட்வா’ (Ditwah) சூறாவளி பாதிப்பு மற்றும் மீட்சி: தேசிய புகைப்படக் கண்காட்சிக்கான அழைப்பு

‘டிட்வா’ சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்சிப் பணிகளை ஆவணப்படுத்தும் வகையில், “தேசிய காட்சிப் பதிவேடு” (National Visual Chronicle) ஒன்றை உருவாக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கமைய, தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள்,  புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தகுந்த புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.

இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, 2026 பெப்ரவரி 13 முதல் 17 வரை கொழும்பு தாமரை கோபுர (Lotus Tower) வளாகத்தில் தேசிய புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய புகைப்படங்களின் தலைப்புகள்:

பின்வரும் விடயங்களைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களைச் சமர்ப்பிக்கலாம்:

  • டிட்வா சூறாவளியால் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அனர்த்தங்கள்.

  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பணிகள்.

  • மீட்சி மற்றும் புனரமைப்புக்கான முயற்சிகள்.

  • இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பான தங்குமிடங்கள்.

  • வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல்.

தெரிவு முறை மற்றும் அங்கீகாரம்:

  • சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களிலிருந்து தகுதியானவற்றை ஒரு விசேட குழு தெரிவு செய்யும்.

  • தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் தேசிய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதுடன், அதிகாரபூர்வ புகைப்படப் புத்தகத்திலும் (Photo book) சேர்க்கப்படும்.

  • அத்துடன், புகைப்படக் கலைஞரின் பெயர் மற்றும் பதிப்புரிமைத் தகவல்களுடன் இணையவழி காட்சி ஆவணகத்திலும் (Online visual archive) இவை பதிவேற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

புகைப்படங்களை 2026 ஜனவரி 16 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்

Alternatively, printed photographs may be handed over to:

The Photography Unit,

President’s Media Division

4th Floor, Standard Chartered Building,

Janadhipathi Mawatha, Colombo 01.

Each photograph submitted must be accompanied by the following details:

  •  Name of the photographer
  •  Location (District / Town / Village)
  •  Date (or approximate date)
  •  A brief description of the subject of the photograph
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்