யாழ்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர் ரி என் சூரியராஜா இதனை தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம்கொள்ளதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வங்களா விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
யாழ்மாவட்டத்திற்குரிய தீவககடல்போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது மீனவர்கள் கடலிற்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றும் நாளையும் யாழ்மாவட்டத்தில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி காணப்படலாம் என தெரிவித்துள்ளது.
யாழ்மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அனர்த்த முகாமைத்து கூட்டம் இடம்பெற்றது.
அரச அதிபர் சகலபிரதேசங்களுக்குமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.முக்கியமாக கிராம மட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
