இலங்கையில் ‘கிளிக் டு பே’ (Click to Pay) வசதியை அறிமுகப்படுத்துகிறது விசா நிறுவனம்

நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற டிஜிட்டல் வர்த்தக அனுபவத்தை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கையில் ‘கிளிக் டு பே’ (Click to Pay) வசதியை அறிமுகப்படுத்துவதாக விசா (Visa) நிறுவனம் அறிவித்துள்ளது.

‘கிளிக் டு பே’ வசதியானது இணையவழிப் கட்டணங்களைச் செலுத்தும் (Online payment checkout) அனுபவத்தை பெருமளவில் மேம்படுத்துகிறது. இதன் மூலம்:

  • நுகர்வோர்: எந்தவொரு சிக்கலும் இன்றி வேகமாகவும், பாதுகாப்பாகவும் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.

  • வியாபாரிகள் (Merchants): பணப்பரிமாற்றங்கள் தோல்வியடைவதைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் கொள்வனவை முழுமையாக நிறைவு செய்வதை (Customer conversions) அதிகரிக்க முடியும்.

  • அட்டை வழங்கும் வங்கிகள் (Issuer-banks): வாடிக்கையாளர்கள் தங்களது அட்டைகளைப் (Cards) பயன்படுத்தும் வீதத்தை அதிகரிக்க முடியும்.

இலங்கையில் டிஜிட்டல் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நுகர்வோரும் வணிக நிறுவனங்களும் வேகமான, எளிமையான மற்றும் பாதுகாப்பான கட்டணச் செலுத்தல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இருப்பினும், இணையவழிப் பரிமாற்றங்களில் ஒரு முக்கிய படியாக விளங்கும் ‘கெஸ்ட் செக்அவுட்’ (Guest checkout – கணக்கொன்றை உருவாக்காமல் தற்காலிகமாகப் பணம் செலுத்துதல்) முறை பல இணையதளங்கள் மற்றும் செயலிகளில் இன்னும் கடினமானதாகவே உள்ளது. அட்டையின் விபரங்களை கைமுறையாக உள்ளீடு செய்தல், பல படிவங்களை நிரப்புதல் மற்றும் மீண்டும் மீண்டும் அங்கீகாரப் படிகளை (Authentication steps) கடக்க வேண்டியிருப்பதால் பரிவர்த்தனைகள் தாமதமடைகின்றன. இது வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்காமல் வெளியேறுவதற்கும் (Abandoned shopping carts), வியாபாரிகளுக்கு வணிக இழப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது.

‘கிளிக் டு பே’ வசதி மூலம், நுகர்வோர் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் ஒரு வியாபாரியின் இணையதளம் அல்லது செயலியில் முதன்முறையாகப் பணம் செலுத்தும் போது, ஒருமுறை மட்டும் எளிய பதிவைச் (One-time setup) செய்துகொண்டால் போதுமானது. தங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, ஒரு சில எளிய படிகளில் தங்களது விசா அட்டையை அவர்கள் பாதுகாப்பாகப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு செய்யும் கொள்வனவுகளின் போது, சேமிக்கப்பட்ட அட்டை விபரங்களை உடனடியாகப் பெற்று, தங்களுக்கு விருப்பமான அட்டையைத் தேர்ந்தெடுத்து, ஒரு சில கிளிக்குகளில் பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்; ஒவ்வொரு முறையும் அட்டை விபரங்களை மீண்டும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) போன்ற தற்போதைய பாதுகாப்பு அங்கீகார முறைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பாக அமையும்.

‘கிளிக் டு பே’ வசதியில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது ‘டோக்கனைசேஷன்’ (Tokenised by design) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, செக்அவுட் செயல்முறையின் போது வாடிக்கையாளரின் முக்கியமான அட்டை விபரங்களுக்குப் பதிலாக, பின்னணியில் அவை பாதுகாப்பான டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றப்படும். இதனால் உண்மையான அட்டை எண் யாருக்கும் தெரியாது என்பதால், மோசடி அபாயங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு, கட்டணச் செலுத்தல் செயல்திறன் பலப்படுத்தப்படுகிறது.

இது குறித்து விசா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முகாமையாளர் அவந்தி கொலம்பகே (Avanthi Colombage) கருத்துத் தெரிவிக்கையில், “‘கிளிக் டு பே’ மூலம் ஆன்லைன் செக்அவுட்களை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதன் ஊடாக, நுகர்வோர் தடையற்ற டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்தும் அனுபவத்தை மேம்படுத்த விசா உதவுகிறது. செக்அவுட் அனுபவத்தில் டோக்கனைசேஷன் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம், கட்டணச் செயல்முறையின் போது அட்டையின் விபரங்கள் வெளிப்படுவதை நாங்கள் குறைக்கிறோம். இது நுகர்வோர் ஒவ்வொரு ஆன்லைன் கொள்வனவையும் பாதுகாப்பாகவும் எந்தவொரு தடையுமின்றியும் செய்ய வழிவகுக்கிறது.

நாட்டின் டிஜிட்டல் கட்டணச் கட்டமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கையில் கட்டணச் செலுத்தல் திறன்களை மேம்படுத்துவதற்காக விசா அறிமுகப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை இதுவாகும்” என்று கூறினார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்