வெளிநாட்டு உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஆதரவளிக்க ஏஇசிசி குளோபல் நிறுவனத்துடன் செலான் வங்கி கூட்டணி

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கான நிதி அணுகலை மேம்படுத்தும் நோக்கில், முன்னணி சர்வதேச கல்வி ஆலோசனை நிறுவனமான ஏஇசிசி குளோபல் (AECC Global – Pvt Ltd) நிறுவனத்துடன் செலான் வங்கி ஒரு மூலோபாயக் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஏஇசிசி குளோபல், மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான பயணங்களுக்கு வழிகாட்டும் மற்றும் ஆதரவளிக்கும் ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனமாகும். இந்த கூட்டுறவின் மூலம், ஏஇசிசி நிறுவனத்தின் ஆலோசனைச் சேவைகளுடன் இணைந்து, மாணவர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையிலான பிரத்யேக நிதித் தீர்வுகளை செய்லான் வங்கி வழங்கவுள்ளது.

செலான் வங்கி Merchant Portal சேவைகளை பெற்றுக்கொண்ட அமெரிக்கன் எடியுகேஷன் சென்டர்

இக்கூட்டுமுயற்சியானது மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கவுள்ளதுடன், ஏஇசிசி மாணவர்கள் தங்களின் சர்வதேச கல்விப் பாதைகளைத் திட்டமிடும்போது செய்லான் வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். மாணவர்களின் கல்வி அபிலாஷைகளுக்கும் அவர்களின் நிதித் தயார்நிலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், மாணவர்கள் வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் கல்விக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது அதிக நம்பிக்கையையும் வசதியையும் இத்திட்டம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு குறித்து செலான் வங்கி பிஎல்சியின் சில்லறை வங்கித் துறைக்கான (Retail Banking) பிரதிப் பொது மேலாளர் யுஜின் செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர்வது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை செய்லான் வங்கியில் நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த கூட்டாண்மையானது மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எளிதான, நம்பகமான நிதித் தீர்வுகள் மூலம் சிறந்த ஆதரவை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும், இது மிகவும் மலிவான கட்டணத்திலும், கவர்ச்சிகரமான மாற்று விகிதங்களிலும் வெளிநாட்டுச் செலுத்துகைகளை (foreign payments) மேற்கொள்ள அவர்களுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித மனப்பாரமும் இன்றி தங்களின் கல்வி இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த முடியும்,” என்று கூறினார்.

இலங்கை இளைஞர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்குபவர் என்ற தனது பங்கை வலுப்படுத்தும் அதேவேளையில், அர்த்தமுள்ள நிதி ஆதரவின் மூலம் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிப்பதில் செய்லான் வங்கி கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன், பல்கலைக்கழக சேர்க்கை வழிகாட்டல்களுக்கு அப்பால் நிதித் திட்டமிடல் போன்ற நடைமுறை சார்ந்த பகுதிகளுக்கும் தங்களது விரிவான ஆலோசனைகளை விரிவாக்குவதற்கான ஏஇசிசி குளோபல் நிறுவனத்தின் நோக்கத்தையும் இது பலப்படுத்துகிறது.

சர்வதேச கல்விக்கான தேவை அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இந்த முக்கியமான படியை எடுத்து வைக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஆதரவான அனுபவத்தை வழங்கும் வகையில் இக்கூட்டாண்மை மிகச் சரியான நேரத்தில் எட்டப்பட்டுள்ள

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை