யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் சமர்ப்பித்த பிரேரணை -பாராளுமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைவிவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் குறிப்பிட்டுள்ளார்
அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது.
அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் யாழ்ப்பாண பிரதேசத்தில் சுற்றுலாத்துறைச் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், யாழ்ப்பாணத்தை ஒரு உயிர்ப்பான கலாசாரப் பயண முடிவிடமாக மாற்றமுடிவதாலும், யாழ்ப்பாணமும் இலங்கையின் வட மாகாணமும் பிரதான கேந்திர இடங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரதேசத்தின் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைப்பை ஏற்படுத்தல், உண்மையான சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தல், இலங்கையின் வட மாகாணத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையினையும் அவர்களின் திருப்தியையும் அதிகரிப்பதற்கான உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் இணைப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்துகின்ற கொள்கைகள் மற்றும் முதலீடுகளுக்காக ஆதரவளித்தல், பிரதேசத்தில் சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிற்பாட்டாளர்களை வலுவூட்டுதல் மற்றும் கலாசார மரபுரிமைகளை மேம்படுத்தும் சுற்றுலாத்துறைச் சேவை வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் அவற்றுக்கு வசதியளிப்பதன் மூலமும் யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் சுற்றுலா கைத்தொழிலின் நிலையான அபிவிருத்தி மற்றும் பொருளாதார விருத்தியை மேம்படுத்துகின்ற அரசு–தனியார் பங்காண்மையை மேம்படுத்துவதன் மூலமும் 12 முதல் 18 மாதங்களுக்குள் நிலைபேறான பொருளாதாரப் பயன்களை அடைந்துகொள்ளும் இலக்கை நோக்காகக் கொண்டு, பிராந்தியத்தின் தொழில் மற்றும் வணிக வாய்ப்புகள் மீது அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்காணிப்பதனூடாக யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்ட சுற்றுலா தளமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
