மின்சாரக் கட்டணம்: அவசரத் திருத்தத்தை நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)

2026 ஜூலை 03 |

  • மின் உற்பத்திக்கான பல உள்ளீடுகளில் டீசல் என்பது ஒரு பகுதி மட்டுமே எனக் சுட்டிக்காட்டுப்பு

  • அடுத்த கட்டணத் திருத்தத்தின் போது நுகர்வோருக்கு எரிபொருள் விலை குறைப்பின் பலன் கிடைக்கும்

எரிபொருள் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியில், உடனடியாக மின்சாரக் கட்டணத் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பல உள்ளீடுகளில் டீசல் என்பது ஒரு கூறு மாத்திரமே என்பதே இதற்குரிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது எரிபொருள் விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு நிச்சயம் வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

நேற்று (2) ‘த டெய்லி மோர்னிங்’ (The Daily Morning) நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத், தற்போது நடைமுறையிலுள்ள விலை நிர்ணய முறைமை மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாகவே கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் சூழ்நிலைகள் காணப்படுவதாகவும் விளக்கினார்.

டீசல் விலை மாத்திரம் குறைந்திருப்பது உடனடி கட்டணத் திருத்தத்தை நியாயப்படுத்துவதற்குப் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டினார். “மின் உற்பத்தியில் டீசல் என்பது ஒரு அங்கம் மட்டுமே. அதன் விலை 20 ரூபாவினால் குறைந்துவிட்டது என்பதற்காக உடனடியாகக் கட்டணங்களை மாற்றிவிட முடியாது. மின் உற்பத்தியானது நிலக்கரி, நெப்தா (Naphtha) மற்றும் பர்னஸ் எண்ணெய் (Furnace oil) போன்ற இன்னும் பல மூலங்களிலேயே தங்கியுள்ளது” என்றார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஹேரத், அடுத்ததாக திட்டமிடப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது, அனைத்து செலவுக் கூறுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு, எரிபொருள் விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்றார். “எரிபொருள் விலை குறைப்பின் பலன் அடுத்த திருத்தத்தின் போது நிச்சயமாக பொதுமக்களுக்கு சென்றடையும். அடுத்த கட்டண சரிசெய்தலுக்கு முன்னதாக அனைத்து செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘த டெய்லி மோர்னிங்’ நாளிதழுடன் பேசிய மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, இறக்குமதி செய்யப்படும் டீசலின் பெரும் பகுதி மின் உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், மின்சாரக் கட்டணங்களை மாற்றிமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாமதமின்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

கடந்த திங்கட்கிழமை (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) மேற்கொண்ட எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்தே இக்கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி, ஓட்டோ டீசல் (Auto Diesel) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 382 ரூபாவாகவும், 92 ரக பெட்ரோல் (Petrol 92 Octane) விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 414 ரூபாவாகவும் மாற்றியமைக்கப்பட்டது. சுப்பர் டீசல், 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அரசாங்கம் கோராது எனத் தெரிவித்திருந்தார். எனினும், ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்த்ததை விடக் குறைவான மழையே பெய்ததால் அது மின் உற்பத்தியைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான (Q4) கட்டணத் திருத்தத்தைக் கோரும் போது, அந்த வறண்ட காலப்பகுதியில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் அது அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு