குளோபல் ஹெல்த் இலங்கை விருதுகள் 2026: சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் ஹெல்த் ரிசார்ட் கௌரவிக்கப்பட்டன

முதலாவது ‘குளோபல் ஹெல்த் ஆசிய-பசிபிக் இலங்கை மாநாடு மற்றும் விருதுகள் 2026’ (GlobalHealth Asia-Pacific Sri Lanka Conference and Awards 2026) நிகழ்வில், சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்பு வரம்பு மற்றும் சித்தாலேப ஆயுர்வேத ஹெல்த் ரிசார்ட் ஆகியன இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றுகௌரவிக்கப்பட்டன

சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புகள் “இலங்கையின் மூலிகை நல்வாழ்வு மற்றும் செயல்பாட்டு ஊட்டச்சத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது” (Excellence in Herbal Wellness and Functional Nutrition in Sri Lanka) பெற, சித்தாலேப ஆயுர்வேத ஹெல்த் ரிசார்ட் “இலங்கையின் சிறந்த முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சேவை வழங்கி” (Holistic Health and Wellness Service Provider of the Year in Sri Lanka) என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் ஜூலை 21, 2026 அன்று நடைபெற்ற ‘குளோபல் ஹெல்த் இலங்கை விருதுகள் விழா’வில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சர்வதேச மற்றும் உள்ளூர் நடுவர் மன்றத்தினால் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட கடுமையான மதிப்பீட்டு செயல்முறையின் மூலம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறைகளில் சிறந்து விளங்குதல், நெறிமுறைகள் மற்றும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில், பிராந்திய சுகாதாரத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நல்வாழ்வு நிபுணர்களை இந்நிகழ்வு ஒன்றிணைத்தது.

‘குளோபல் ஹெல்த் ஆசிய-பசிபிக்’ என்பது 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள், அழகியல் மையங்கள், நல்வாழ்வு தளங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை இணைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி பிராந்திய அமைப்பாகும். தொழில்முறை நடைமுறை, நெறிமுறை நிர்வாகம், சிறந்த சேவை மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட புதுமைகளின் மிக உயர்ந்த தரநிலைகளை பராமரிக்கும் நிறுவனங்களை ‘குளோபல் ஹெல்த் இலங்கை விருதுகள்’ கௌரவிக்கின்றன.

 

சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு கிடைத்த இந்த அங்கீகாரமானது, நம்பிக்கை, தரம் மற்றும் இயற்கை குணப்படுத்துதலுக்கு இணையான மூலிகைத் தயாரிப்புகள் மூலம் ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக பாரம்பரிய ஆயுர்வேத சுகாதாரப் பராமரிப்பில் அது ஆற்றி வரும் முன்னோடிப் பணியைக் கொண்டாடுகிறது. இலங்கையின் வளமான உள்நாட்டு ஆயுர்வேத அறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளால் செம்மைப்படுத்தப்பட்ட சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புகள், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையில் பாரம்பரிய ஆயுர்வேதத்தின் நன்மைகளைக் கொண்டு சேர்த்துள்ளன.

பழமையான ஆயுர்வேத ஞானத்தை நவீன அறிவியல் ஆராய்ச்சி, கடுமையான தர உத்தரவாதம் மற்றும் பொறுப்பான உற்பத்தி முறைகளுடன் இணைத்து, பாரம்பரிய ஆயுர்வேதத்தின் தன்மையை மாற்றாமல் நுகர்வோரின் மாறிவரும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சித்தலேப தயாரிப்புகள் தொடர்ந்து பரிணமித்து வருகின்றன. இந்த அர்ப்பணிப்பு, சித்தாலேப இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத முத்திரைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

90 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொடங்கப்பட்ட சித்தாலேப ஆயுர்வேத தயாரிப்புகள், இன்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை ஆயுர்வேதத்தின் அடையாளமாக வளர்ந்துள்ளன. தலைமுற தலைமுறையாக நம்பப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்த தயாரிப்புகள், இலங்கையின் மருத்துவ பாரம்பரியத்தை எல்லைகளைத் தாண்டி கொண்டு செல்வதுடன், உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிய இயற்கை சுகாதார தீர்வுகளையும் வழங்கி வருகின்றன.

இச்சாதனைக்கு மகுடம் சூட்டும் வகையில், சித்தாலேப ஆயுர்வேத ஹெல்த் ரிசார்ட் “இலங்கையின் சிறந்த முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சேவை வழங்கி” விருதை வென்றுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள், சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் நவீன விருந்தோம்பல் தரநிலைகளுடன் கூடிய பாரம்பரிய நடைமுறைகளை இணைத்து, உண்மையான ஆயுர்வேத குணப்படுத்தும் அனுபவங்களை வழங்குவதில் ரிசார்ட்டின் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது. பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகளை உருவாக்குவதில் சித்தலேபவின் பல தசாப்த கால நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஹெல்த் ரிசார்ட் விருந்தினர்களுக்கு பயனுள்ள குணப்படுத்தும் பயணங்களை உருவாக்குகிறது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த  குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அசோக ஹெட்டிகொட:

“இலங்கை ஆயுர்வேதத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, அதன் நன்மைகள் தொடர்ந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. எங்கள் மூலிகை சுகாதாரப் பொருட்கள் மூலம் இலங்கை ஆயுர்வேத பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு கொண்டு சென்றுள்ளோம். அதே வேளையில் சித்தலேப ஆயுர்வேத ஹெல்த் ரிசார்ட் ஆயுர்வேதத்தின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தும் உண்மையான குணப்படுத்தும் அனுபவங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. எங்கள் அர்ப்பணிப்புள்ள குழு மற்றும் சித்தலேப மீது நம்பிக்கை வைத்த பல தலைமுறை வாடிக்கையாளர்களின் சார்பில் இந்த விருதுகளைப் பெறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கூறினார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதன் தயாரிப்பு வரம்புகள் இலங்கை ஆயுர்வேத பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் அதே வேளையில், சித்தலேப ஆயுர்வேத ஹெல்த் ரிசார்ட் நாட்டின் முழுமையான சிகிச்சை பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, பாரம்பரிய ஆயுர்வேதத்தை மேம்படுத்துவதில் சித்தலேபவின் நீடித்த அர்ப்பணிப்பை இந்த இரண்டு அங்கீகாரங்களும் மீண்டும் வலுப்படுத்துகின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்