சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் – ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்

பிராங்கார்டனர்
பிபிசி

சவுதிஅரேபியாவில் கிங் காலித் விமானநிலையத்தின் மீதான தாக்குதல் ஏற்கனவே பதற்றம் மற்றும் மோதலில் சிக்குண்டுள்ள பிராந்தியத்திற்கு மற்றுமொரு ஆபத்தான தருணம்.
சவுதிஅரேபியா இதற்கு தயாராகயிருக்கவில்லை.
கடந்த சில நாட்களாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தனர், ஆனால் சவுதி விமானநிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு மீது இடம்பெற்றுள்ளது.

சவுதிஅரேபியாவின் வான்பாதுகாப்பு கட்டமைப்பு இலகுவாக முறியடிக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவில் சரி செய்யமுடியும் ஆனால் பாதுகாப்பான நாடு என்ற சவுதிஅரேபியாவின் பெயருக்கு மோசமான அடி விழுந்துள்ளது.


விமானநிலையங்களுக்கு அப்பால் ஹெளத்திக்கள் செங்கடலின் முக்கிய பகுதிகளையும், பப் அல் மண்டெப் குடாவின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.யேமன் அரசாங்கம் அந்த பகுதியை மீள கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும், இது செங்கடல் பகுதியில் பயணத்தை ஆபத்தானதாக மாற்றியுள்ளது.
சவுதிஅரேபிய ஆதரவுடனான, சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஈரான் ஆதரவு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் கடந்த ஒரு தசாப்தகாலமாக இடம்பெறுகின்றது.இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் யேமன் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.

EPA/Shutterstock Two soldiers with guns in blue camouflage standing guard in front of a big mural that has may pictures of guns on it.
குழப்பகரமான புவிசார் அரசியல் மோதலில் சவுதி அரேபியா மீதான தாக்குதலை ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் மீதான மோதலை அடிப்படையாகவைத்தே பார்க்கவேண்டியுள்ளது.
2000த்தின் நடுப்பகுதியில் அல்ஹைடா கிளர்ச்சி காணப்பட்ட காலத்தின் பின்னர் சவுதி அரேபியா இவ்வாறானதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டதில்லை.இதயங்களை வெல்லும் மூலோபாயத்தினை பயன்படுத்தி சவுதி அரேபியா அந்த நெருக்கடியை வென்றது.அதன் மூலம் அரேபிய வசந்தத்தின் தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொண்டது.
மார்ச் மாதம் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை ஒருவித அலட்சியத்துடன் அது கையாண்டது.

ஆனால் இது வித்தியாசமானது.மத்திய கிழக்கில் சவுதிஅரேபியாவிடமே மிகவும் வலுவான விமானப்படை உள்ளது.ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அது பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.எனினும் இதனையும் மீறி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பெருமளவு மலைப்பகுதியை இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

ஆனால் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எங்கே தாக்கவேண்டும் என்பதை சரியாக தெரிந்துவைத்துள்ளனர்.சவுதியின் பொருளாதாரத்தின் மென்மையான அடிவயிற்றில்.
ஹோர்முஸ் நீரிணை இன்னமும் திறக்கப்படாமலிருப்பதால் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானிற்கு மிக முக்கியமானவர்களாக மாறியுள்ளனர்.செங்கடலில் ஜிஜான் முதல் குராயிசில் உள்ள பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் வரை ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் டிரோன்களின் இலக்குகளாக மாறியுள்ளன.
செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முயல்கின்றனர்.இது உலக பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது ஈரானிற்கு முக்கியமான பேரம் பேசும் பலம்.


யேமன் மோதல்களில் நேரடியாக தலையிடப்போவதில்லை என கடந்த செப்டம்பரில் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது
எனினும் சவுதிக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவோம் என தெரிவித்த அமெரிக்கா பின்னர் அதனை வெளிப்படையாக உறுதி செய்திருந்தது.
எனினும் ரியாத் தாக்குதலை தொடர்ந்து இந்த நிலை மாற்றமடைந்திருக்கலாம்- இதில் அமெரிக்க பிரஜையொருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
மிகமோசமான தாக்குதல் என இதனை வர்ணித்த டிரம்ப் தான் இராணுவரீதியில் தலையிடநேரிடலாம் என தெரிவித்தார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு