அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜேவிபி உறுப்பினர்களையும் பொலிஸாரையும் பயன்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
2015 முதல் 2019 வரை 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஜேவிபி தற்போது எதிர்கட்சிகள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதை தடுப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.
2022 ஜூலையில் அரகலய மிக உச்சத்தில் இருந்த நாட்களில் ஜேவிபி நாடாளுமன்றத்தை தீயிட்டுக்கொழுத்தப்போவதாக தெரிவித்தது.
ஆனால் தற்போது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு பொலிஸாரை மிகத்தீவிரமாக பயன்படுத்துகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதகுருமாரின் மன உறுதியை குலைப்பதற்காக ஜனாதிபதி பொலிஸாரையும் விசாரணை பிரிவினரையும் ஜேவிபி உறுப்பினர்களையும் பயன்படுத்துகின்றார்.பௌத்தமதகுருமார்களுக்கு கழிவறை வசதிகளை வழங்கவேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபையை கேட்டுக்கொள்ளும் அளவிற்கு அரசாங்கம் சென்றது என அவர் தெரிவித்துள்ளார்.