சனிக்கிழமை ஏற்பட்ட நாடு தழுவிய மின்துண்டிப்பு தொடர்பில் தேசிய அமைப்பு இயக்குநர் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் மூலம் எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
2025 பெப்ரவரியில் ஏற்பட்ட இதேபோன்ற மின்துண்டிப்பை தொடர்ந்து தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்த அமைப்பு நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மின்சார நுகர்வோர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ தம்மிக மேலும் தெரிவித்துள்ளதாவது
2025 பெப்ரவரியில் ஏற்பட்ட மின்துண்டிப்பை தொடர்ந்து கலந்தாலோசனையொன்றை மேற்கொண்ட பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்தது, அந்த பரிந்துரைகளில் எவற்றையும தேசிய அமைப்பு இயக்குநர் என்ற தனியார் நிறுவனம் நடைமுறைப்படுத்தவில்லை.
அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் சனிக்கிழமை நிலைமை ஏற்பட்டிருக்காது.
மேலும் தேசிய அமைப்பை மேம்படுத்துவதற்கான செலவீனங்களை மின்சாரகட்டணங்களில் சேர்த்தனர் அந்த மாற்றங்கள் இடம்பெறவில்லை,அவர்கள் இந்த செலவீனங்கள் அனைத்தையும் உள்வாங்கி மின்கட்டணங்களை அதிகரிக்கின்றார்கள் இறுதியில் செய்யவேண்டிய மாற்றங்களை அவர்கள் செய்வதில்லை.
தேசிய மின்கட்டமைப்பை இயக்குகின்ற அமைப்பு என்ற அடிப்படையில் இந்த என்எஸ்ஓவை சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் அவர்கள் தான் இதற்கு பொறுப்பு என்றால் அவர்கள் தங்களை தாங்களே விசாரணை செய்வது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.