இலங்கையில் ஷாங்கிரி-லா ஹோட்டல் முதலீடு எவ்வாறான சூழலில் இடம்பெற்றது ?- முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிசிடம் விசாரணை

இலங்கையி;ல் ஷாங்கிரி- லா ஹோட்டல் முதலீடு இடம்பெற்ற விதம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிசிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
செவ்வாய்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து பல மாதங்களின் பின்னர் 2010 ஏப்பிரல் 23ம் திகதி நான் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றேன், அவ்வேளை இலங்கை வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலையில் காணப்பட்டது பொருளாதார சவால்களும் காணப்பட்டன.
அவ்வேளை ஷங்கிரி -லா ஹோட்டலின் பிரதிநிதிகள் இலங்கையில் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்னான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு விருப்பம் வெளியிட்டனர்.
நான் இந்த விடயத்தில் மிகவும் உயர்மட்டத்தின் அனுமதி தேவை என கருதியதால் அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவிடம் இதனை தெரிவித்தேன்.
மகிந்த ராஜபக்ச வரவேற்று வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுமாறு தெரிவித்தார்.
நான் அமைச்சரானதும் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டிருந்தது.அதிகளவில் பணத்தை செலவிடும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் அரசாங்கம் சங்கிரிலா முதலீட்டை ஊக்குவித்தது.
ஷங்கிரி லா ஏனைய ஹோட்டல்துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கை குறித்த நம்பிக்கையை அளித்தது அதன் பின்னர் பல ஹோட்டல்கள் இலங்கையில் உருவாகின. 2010 ம் ஆண்டின் பின்னர் பல ஹோட்டல்கள் காரணமாக கொழும்பு மாறியது நான் தவறிழைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

srilankan air
ஜூன்மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் கணிணி அமைப்புகளை முடக்கிய ஹேக்கர்கள் - அதிர்ச்சி தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் தயாசிறி
doug 5
டக்ளசின் ஊர்காவற்றுறை அலுவலகத்திலும் சோதனை
Douglas-Devananda-682x375-1
டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரமில்லாத ஆயுதங்கள் தொடர்பிலேயே அவரின் அலுவலகத்தில் சோதனை – பொலிஸார் தகவல்
MediaFile_20261020_132906_173
சிறையில் அடைக்கப்படும் பௌத்தமதகுருமார் தொடர்பான உத்தேச சட்டசீர்திருத்தங்கள் - பௌத்தமதகுருமார் அங்கீகாரம்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாக செயற்பட முடியாது – அமைச்சரவை பேச்சாளர்
855843972_4049874998651154_1513888907795219660_n
உள்ளகப் பொறிமுறையில் அறவே நம்பிக்கை இல்லை: நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! - யாழ்.வடமராட்சி ஊடக இல்லம் 
vyas
மிலான்- வியாஸ்காந்திற்கு ஏன் தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
chemmani145
செம்மணி – ராஜ்சோமதேவவின் இடைக்கால அறிக்கையும் - நீதிக்கான தேடலும்
harshana parli
பச்சை குத்திக்கொண்டால் தலைமுடியை நீளமாக வளர்த்தால் எதிர்காலத்தில்; தண்டனையா? நீதியமைச்சர் தெரிவித்திருப்பது என்ன?
mark carney1111
அல்பேர்ட்டா மக்கள் கனடாவை தெரிவு செய்துள்ளனர்- சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பு குறித்து மார்க் கார்னி