மிலான்- வியாஸ்காந்திற்கு ஏன் தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கான தேர்வு முறையானது வீரர்களின் இனம் அல்லது பிராந்திய பின்னணியை கொண்டது அல்லது என தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே திறமைகளின் அடிப்படையிலேயே வீரர்கள் தெரிவு செய்யப்டுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கு சுயாதீனமான தெரிவுக்குழுவே பொறுப்பு.
அணிக்கு ஒரு வீரரை தெரிவு செய்யும்போது தெரிவுக்குழு பல விடயங்களை கருத்தில்கொள்ளும்,இன புவியியல் சார் பின்னணிகளை அடிப்படையாக வைத்து வீரர்களை தெரிவு செய்வதில்லை.
வீரர்களை தெரிவு செய்யும்போது தெரிவுக்குழுவினர் இனம் பிரதேசம் போன்றவற்றை கருத்தில்கொள்வார்கள் என நான் கருதவில்லை.வீரர்களின் திறமையை கருத்தில்கொள்வார்கள்.
விஜயஸ்காந் மிலான் ரத்நாயக்க குறித்த கரிசனையை தெரிவுக்குழுவின் கவனத்தி;ற்கு கொண்டுவருவேன் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிலான் ரத்நாயக்க விஜயகாந் வியாஸ்காந் போன்றவர்கள் திறமையை வெளிப்படுத்துகின்ற போதிலும் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஏன் சில பிரதேசங்களை சேர்ந்த வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகின்றது என கேள்வி எழுப்பிய அவர் தற்போது பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் மேல்மாகணம் தென்மாகணத்தை சேர்ந்தவர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர் என்றார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------
Ananda-Wijepala
திலீபன் சிலை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
psta no1
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட புதிய சட்டமூலம் மிகவும் ஆபத்தானது – நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள்
gnasaraa
காவியுடையிலேயே நாளை ஞானசாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Ambika-620x430
நீதியமைச்சர் தெரிவிப்பதற்கு மாறாக ஒரு நபர் ஆடை அணியும் பாணியை வைத்து அவரை கைதுசெய்யலாம் - ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சட்டமூலம் குறித்து அம்பிகா சற்குணநாதன்