முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரமில்லாத துப்பாக்கிகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது
டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்ததாக கூறப்படும் துப்பாக்கிகள் தொடர்பிலான விசாரணையின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
2001ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் டக்ளஸ்தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட பல துப்பாக்கிகளில் ஒன்று- கைத்துப்பாக்கி 2019ம் ஆண்டு வெலிவேரியவில் உள்ள மதகிற்கு அருகில் வைத்து மீட்கப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த மாகந்துரே மகேஷ் வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.