ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கணிணி அமைப்புகளை முடக்கிய ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சியில் 50,000 டொலர்களை கோரியுள்ளனர் என்ற பரபரப்பு தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜெயசேகர நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
தேசிய விமானசேவை நிறுவனம் இன்னமும் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2026ஜூன் மாதத்தில் ஸ்ரீலங்கன்எயார்லைன்சின் கணிணி அமைப்புகள் ஊருவப்பட்டன என தெரிவித்துள்ள அவர் பின்னர் டார்க்வெப்பில் ஹக்கர்கள் இந்த தாக்குதலிற்கு பொறுப்பேற்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
ஹேக்கர்கள் விமானநிறுவனத்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருப்பதாக தெரிவித்து வீடியோவொன்றை வெளியிட்டதுடன் கிரிப்டோ கரன்சியில் 50000 மில்லியன் டொலர்களை கப்பமாக கோரினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.