ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
ராஜ்சோமதேவ ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார் என்பதே தமிழ்தேசிய பேரவையின் நிலைப்பாடு.
அவருடைய கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்திலே தொல்பொருள்களை பாதுகாப்பதற்கான ஒரு குழுவை அமைத்தபோது அந்த குழுவில் இடம்பெற்றவர் ராஜ்சோமதேவவை கோட்டாபய சேர்த்து வைத்திருந்தவர்.
ராஜ்சோமதேவ ஒரு சுத்தசிங்கள பௌத்த தேசியவாதி.
அவர் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார் என்பது இன்று வெளிவந்திருக்கின்ற செம்மணி தொடர்பான அறிக்கை மூலம் புலனாகியுள்ளது.
நாங்கள் தொடர்ச்சியாக குறிப்பிடுகின்றோம் செம்மணி தொடர்பான விசாரணையை இந்த நாட்டிற்குள்ளே செய்ய முடியாது.
இந்த அரசாங்கம் நேர்மையாக நடந்துகொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு நீங்கள் இணங்கவேண்டும்.
இந்;த குற்றத்தை செய்தவர்கள் அதனை தனியே செய்யவில்லை ஒரு மனோநிலை அதற்கு வழிவகுத்தது அதனை நீங்கள் விளங்கிகொண்டு சர்வதேச விசாரணைக்கு இணங்கவேண்டும் இலலாவிட்டால் உண்மையை கண்டறிய முடியாது.
தயவு செய்து இன்றைக்காவது உங்கள் கண்களை திறந்து நியாயத்தை வழங்குங்கள்
இதுவரை 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் அதேயளவு உடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது அவ்வளவு பாரதூரமான சம்பவத்திலே அக்கறையை செலுத்தி நீங்கள் இனவாதிகள் இல்லை என்பதை நிரூபிப்பதாகயிருந்தால் தயவு செய்து இந்த விவகாரத்திலாவது ஒரு சர்வதேச விசாரணையை தடுக்காமல் உங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
(ரி)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
மயிலத்தமடு விவகாரம் - ஜனாதிபதியை அவசரமாக சந்திப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம்
batti land
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரை மீட்பிற்கான கலந்துரையாடல்
gna12
சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் - வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்
namal courts
பொதுமக்களின் பொருளாதார சுமை குறையும் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றால் 500 நாட்கள் சிறையிலிருக்கவும் தயார் – நாமல்
tear drop
இலங்கை எவ்வாறு போருக்குச் சென்றது? 2009 வரையிலான பாதையைத் தடமறியும் ' (Teardrop Nation)
IPKF1
இந்திய அமைதிப்படையின் கொக்குவில் இந்து படுகொலைகள் - 39 வருடங்கள்
parliment
"அரசாங்கம் 'வஸ்கவி'க்கு பயப்படுகிறது" – நாடாளுமன்றத்தில் பாடலைப் பாடி எதிரணி எம்.பி தயாசிறி சாடல்
b8966750-cef5-11f1-a701-fddedf244c16
வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த நபர் தனது கண்ணில் தென்பட்ட நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்- பிரான்ஸ் தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்
gnasaraa
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை: உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை – கொழும்பு மேல் நீதிமன்றம்
rajeevan 5666
செம்மணி அகழ்வுப் பணியில் சந்தேகங்கள் எழக்கூடாது" – நீதி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் கடிதம்!