பொலிஸ்காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியும்,இரண்டு பொலிஸ் உபபரிசோதகர்களும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் ஹோமாகம பொலிஸ்; நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாகத்தவறுகள் காரணமாகவே இவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ள அதேவேளை ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை உடனடி சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால உத்தரவிட்டுள்ளார்.
பிரேதப்பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகளை அடிப்படையாக வைத்து உரிய சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.