மாத்தளை மனித புதைகுழி விசாரணை 11ம் திகதி-காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்றுகூடவுள்ள உறவுகள்

மாத்தளை மாவட்ட மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சமர்ப்பித்த மனுமீதான விசாரணைகள் நவம்பர் 11ம் திகதி இடம்பெறவுள்ளது.
நாளை விசாரணைகள் இடம்பெறும்வேளை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வெள்ளை ஆடை அணிந்து தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடி நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு செல்லவுள்ளனர்.

மாத்தளை ஆதார வைத்தியசாலைக்கான கட்டுமான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை 2012ம் ஆண்டு 150க்கும் மேற்பட்ட உடல்களுடன் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
1988-89ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின் போது படையினரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் சடலங்களே இவை என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.
1988 முதல் 90ம் ஆண்டு வரை மாத்தளை மாவட்டத்திற்கான இராணுவ இணைப்பாளராக பதவி வகித்த அந்த பகுதியில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சமீது மாத்தளை மனித புதைகுழிகள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையொன்றில் மாத்தளை மாவட்டத்தில் 1042 பேர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே முக்கிய குற்றவாளி என குற்றம்சாட்டியிருந்தன.

(ரி)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

1000015914-695x463
அனோஜனின் வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து சவூதி அரேபியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
anojan
அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்
anil jayantha11
வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது- பிரதிநிதியமைச்சர்
kasap
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியாவின நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
air india
கொல்கத்தா - மும்பை ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் அச்சுறுத்தல்; தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட விமானம்
kasapa1111
"நான் இறந்தால்"  -  கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
Gnanasara march (1)
பாதயாத்திரையிலிருந்து சத்தியாக்கிரகம் வரை கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது
Kasappa-Thera
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்
nanda2026
பொருளாதார வளர்ச்சிக்கு பாராளுமன்றமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு: அரசின் சீர்திருத்தங்களை வரவேற்றார் நிதியியல் குழுத் தலைவர் ஹர்ஷ
lectures
ஒப்பந்தங்கள் பிணைவிதிகளை மீறி வெளிநாடு சென்ற விரிவுரையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொகை -3000 கோடி – கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள்